i

நிகழ்வுகள்

ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவை (SNPP) துவக்க விழா

16-02-2008-ம் தேதியன்று மதுரை ராமலிங்கசாமி மகாலில் நடைபெற்ற ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவையின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் மறு சீரமைப்புக் கூட்டத்தில் புதிதாக சில பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேரவையின் செயல்பாடுகள் குறித்து விவாதித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீ நாராயண குருவின் கொள்கைகளை சுவரொட்டிகள், கருத்தரங்குகள் மூலம்   தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வது என்று தீர்மானிக்கப் பட்டது.

ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவையின் முழக்கமாக கீழ்காணும் வாக்கியம் தேர்வு செய்யப்பட்டது.

"தமிழனுக்கு உண்டு ஒரு சாதி அதுவே எங்கள் தமிழ் சாதி"

கீழ்காணும் தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டது.

உத்தரப் பிரதேச மாநில அரசு கொண்டு வந்துள்ள  ஸ்ரீ நாராயண குரு பயிற்சி மையம் போல தமிழ்நாடு அரசும் தமிழகத்தில் ஸ்ரீ நாராயண குரு பெயரில் ஒரு பயிற்சி மையம் அமைக்க முன் வர வேண்டும்.

இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவையின் தலைமை அலுவலகத்திற்கான கட்டிடம் மதுரையில் விரைவில் கட்ட முயற்சிப்பது.

ஏழை, எளிய மக்களுக்கு கல்வி, மருத்துவ வசதிகளை கேரளாவில் இயங்கும் S.N.D.P மற்றும் S.N.D.S. உதவியுடன் வழங்குவது.

______________________________________________________

கேரளாவின் SNDS கூட்டத்தில் SNPP தலைவர்

கேரளாவிலுள்ள SNDS கூட்டத்தில்  ஸ்ரீ நாராயண குரு பண்பாட்டு பேரவை (SNPP) யின் தலைவர் திரு. கே.வி.கனகாம்பரம் பேசிய போது எடுத்த படம்.

______________________________________________________

முத்துக்கமலம் இணைய இதழ் படித்தீர்களா?

Linked to muthukamalam.com 

 

Google

English

Dedicated by: Sri Narayana Guru Panpattu Peravai (SNPP), 41, West Ponnagaram Main Road, Madurai-625 016, India.